பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

ரயிலில் பட்டாக் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயில்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் படியில் தொங்கியபடியும் , ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டே  பயணம் செய்வது போன்ற சாகசங்கள் செய்யும் வீடியோ அடிக்கடி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்குத் தொந்தரவு அளிக்கும் வகையில் மாணவர்கள் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓடும் ரயிலில் காலை தேய்த்துக் கொண்டே செல்வதும், பட்டாக் கத்தியைத் தரையில் தீட்டி பொறிபறக்க விடுவதும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை - திருத்தணி மின்சார ரயிலில் தொங்கியபடி, கத்தியுடன் தனியார் கல்லூரி மாணவர்கள்  பயணம் செய்த 6 மாணவர்கள் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோல்  பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக் கோட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும்  நேற்று போலீஸார் கைது செய்தனர்.  கத்தி வைத்திருந்த அந்த மாணவன் காவல்துறையினரைப் பார்த்ததும்  தப்பி ஓடிய நிலையில், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து அரிவாள், பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய  ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,  விஷம செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் மாணவர்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in