பராமரிப்பால் ரயில்வே கேட் மூடல்; ரயில் சேவையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் அவதி!

பராமரிப்பால் ரயில்வே கேட் மூடல்; ரயில் சேவையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் அவதி!

நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிக்காக அனைத்து ரயில்வே கேட்களும் இன்று நாள் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் இன்று நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நடப்பதால் இந்த வழித்தடத்தில் வரும் ரயில்வே பாதைகள் அனைத்தும் இன்று நாள் முழுவதும் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்- கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் காக்கமூர்-சுசீந்திரம், பறக்கை-வடக்குத் தாமரைக்குளம், வடக்குதாமரைக்குளம்-சுவாமிதோப்பு ஆகிய மூன்று ரயில்வே கேட்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இந்த மூன்று ரயில்வே கேட்களும் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த கேட்கள் முற்றிலும் மூடப்பட்டன.

இந்த வழியாக வந்தவர்கள் மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றனர். இந்த ரயில்வே வழித்தடங்களில் சோதனை, பராமரிப்புப் பணிகள் நடந்தன. காக்கமூர்-சுசீந்திரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் காக்கமூரிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றனர். ரயில் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக கேட் மூடப்பட்டாலும், ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in