‘எளிமையும் அன்பும்... இதுதான் இந்தியாவை இணைக்கும்’ - சிறுமிக்குக் காலணி அணிவித்த ராகுலுக்குப் புகழாரம்!

‘எளிமையும் அன்பும்... இதுதான் இந்தியாவை இணைக்கும்’ - சிறுமிக்குக் காலணி அணிவித்த ராகுலுக்குப் புகழாரம்!

‘இந்தியாவை இணைப்போம்’ (பாரத் ஜோடோ) யாத்திரையைத் தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது கேரளத்தில் அந்தப் பயணத்தைத் தொடர்கிறார். இப்பயணத்தின் 11-வது நாளான இன்று ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாடு நகரில் பயணத்தை அவர் தொடர்ந்தார்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பயணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. அவற்றில் ஒரு வீடியோவில், தன்னுடன் நடந்துவரும் ஒரு சிறுமியின் காலணி சற்றே கழன்றிருந்ததைக் கவனிக்கும் ராகுல், நடையை நிறுத்திவிட்டு அச்சிறுமியின் காலணியைச் சரி செய்கிறார். பின்னர் புன்னகையுடன் பயணத்தைத் தொடர்கிறார்.

இந்தக் காட்சியை மகளிர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான நெட்டா டி’சோஸா ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். கூடவே, ’எளிமையும் அன்பும். இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க இவை இரண்டும் தேவை’ என அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், இணையவாசிகள் பலரும் ராகுலின் இந்தச் செயலை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in