நாய்த் தட்டில் இருந்த பிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கிய ராகுல்... வைரலாகும் வீடியோ!

நாய்த் தட்டில் இருந்த பிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கிய ராகுல்...
நாய்த் தட்டில் இருந்த பிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கிய ராகுல்...

ஜார்க்கண்டில் நடைப்பயணத்தின்போது, கைகுலுக்க முயன்ற தொண்டரிடம் நாய்த் தட்டில் இருந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி எடுத்துக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவரது நடைப்பயண குழு தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், ராஞ்சியில் நேற்றைய நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி, ஜீப்பின் மேற்பகுதியில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தி தனது செல்ல நாய்க்கு பிஸ்கட் கொடுக்க முயன்றார்.

ஆனால், அந்த நாய் பிஸ்கட்டை சாப்பிடாமல் நிராகரித்தது. இதனால், ராகுல் காந்தி அந்த பிஸ்கட்டை நாய்த் தட்டில் வைத்தார். அப்போது திடீரென ஒரு காங்கிரஸ் தொண்டர் ராகுல் காந்தியிடம் வந்து தனது தலைவருடன் கைகுலுக்க கையை முன்னால் நீட்டினார். ஆனால், ராகுல் காந்தி கைகுலுக்குவதற்குப் பதிலாக, நாய் தட்டில் இருந்த பிஸ்கட்டை எடுத்து அந்த தொண்டரிடம் வழங்கினார். இதனால் அந்த தொண்டர் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சி அடைந்தார்.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை
பாரத் ஜோடோ நியாய யாத்திரை

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைு பார்த்துவிட்டு ராகுல் காந்தியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பூத் முகவர்களை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது நாய் சாப்பிடாத பிஸ்கட்டுகளை ராகுல் காந்தி தொண்டருக்கு வழங்குகிறார். ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சித் தொண்டர்களை நாய்களைப் போல நடத்தினால், அத்தகைய கட்சி மறைவது இயற்கையானது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in