உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததார் அளித்த புகாரின் பேரின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐந்து சதவீத கமிஷன் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நபர்களுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் தரவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சாலையை அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பெயர்த்து எடுத்துள்ளனர். இந்த செய்திதான் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறி, எதிர்க்கட்சியினர் பலரும் இதனைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.
இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சாலையை சேதப்படுத்திய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழு தொகையையும் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சிங் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், சாலையை சேதப்படுத்தியதாக 15-20 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட எஸ்பி அசோக் குமார் மீனா, பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பாண்டே கூறுகையில், , இந்த வழக்கு தொடர்பாக முழு தகல்களை திரட்டி உள்ளோம். சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில், எம்எல்ஏ வீர் விக்ரம் சிங் கூறுகையில், ஜக்வீர் சிங் என்னுடைய ஆதரவாளரோ அல்லது எனது உதவியாளரோ இல்லை. ஆனால் அவர் பாஜகவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!