பாகிஸ்தான் எல்லையில் கதிர்வீச்சை கண்டறியும் கருவி... மத்திய அரசு அதிரடி திட்டம்!

கதிர்வீச்சை கண்டறியும் கருவி
கதிர்வீச்சை கண்டறியும் கருவி

அணுக் கருவிகளைத் தயாரிப்பதற்கான கதிரியக்க சாதனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மா் மற்றும் நேபாளம் ஆகிய 4 நாடுகளின் எல்லையில் விரைவில் கதிா்வீச்சு கண்டறியும் கருவிகளை மத்திய அரசு பொருத்த உள்ளது.

அணுக் கருவிகள் அல்லது கதிா்வீச்சை பரப்பும் கருவிகளைத் தயாரிக்க கதிரியக்க சாதனங்களைப் பயன்படுத்தலாம். அந்த சாதனங்கள் இந்தியாவுக்குக் கடத்தப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்தக் கூடும்.

கதிர்வீச்சை கண்டறியும் கருவி
கதிர்வீச்சை கண்டறியும் கருவி

எனவே, அந்த சாதனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள அட்டாரி, வங்கதேச எல்லையையொட்டி உள்ள பெட்ராபோல், அகா்தலா, டாவ்கி, சுதாா்கான்டி, நேபாள எல்லையில் உள்ள ரக்செளல் மற்றும் ஜோக்பனி, மியான்மா் எல்லைப் பகுதியில் உள்ள மோரே ஆகிய 8 இடங்களில், விரைவில் கதிா்வீச்சு கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in