அவர்களுக்கு 5 நாள்; இவர்களுக்கு 9 நாள்: காலாண்டு விடுமுறை அறிவிப்பு

அவர்களுக்கு 5 நாள்; இவர்களுக்கு 9 நாள்: காலாண்டு விடுமுறை அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி துறையால் பொதுக் காலாண்டு தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், பொதுக் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வைப்  பொருத்தவரை பள்ளி அளவில்  வினாத்தாள்களைத் தயாரித்துத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே  முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறையைப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியும், 4, 5 தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி என அரசு விடுமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in