வாகனம் ஏற்றி விவசாயி கொலை: கல்குவாரி உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு

வாகனம் ஏற்றி விவசாயி கொலை: கல்குவாரி உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு

கரூரில் அனுமதி  இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில்  குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் க பரமத்தி அருகே  அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது  கல்குவாரிக்குச் சொந்தமான  வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில்  கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுநர் சக்திவேல், கூலிப்படை கும்பலைச்  சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் குவாரி உரிமையாளர் செல்வகுமார் தனக்கு  ஜாமீன் வழங்கக் கோரி மதுரை   உயர்நீதிமன்றக்  கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரித்தார். அப்போது இறந்த ஜெகநாதன் தாயார் தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து  மனுதாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து செல்வகுமாரின்   ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in