
தமிழகத்தில் முட்டை விலை உயர்வுக்கு கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிதான் காரணம் என்று நாமக்கல் முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முட்டையின் உற்பத்தி குறைவதே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் இருந்த நிலையில் இன்று ஒரு முட்டையின் விலை 6 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.