யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதிக்கு பி.வி.சிந்து,லஷ்யா சென் தகுதி!

பிவி சிந்து, லஷ்யா சென், சங்கர் சுப்பிரமணியன்
பிவி சிந்து, லஷ்யா சென், சங்கர் சுப்பிரமணியன்யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதிக்கு பி.வி.சிந்து,லஷ்யா சென் தகுதி!

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர்களான பி.வி.சிந்து, லஷ்யா சென் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கவுன்சில் பிலப்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சிந்து தைவானின் சங் சூயுன்னுடன் மோதினார். பரபரப்பான இதில் அவர் 21-14, 21-12 என்ற எளிதான செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் .

ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லஷ்யா சென், செக் குடியரசின் ஜான் லௌடாவை எதிர்கொண்டார். இதில் அவர் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த சங்கர் சுப்பிரமணியன், இஸ்ரேலின் மிஸா ஜில்பெர்மெனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சங்கர் 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in