சோகம்... அமெரிக்காவில் சாலை விபத்து... உயிரிழந்த பஞ்சாப் இளைஞர்... உடலை மீட்டுத்தர கோரிக்கை!

ஜக்ஜோத் சிங்
ஜக்ஜோத் சிங்

அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த பஞ்சாப்பைச் சேர்ந்த வாலிபர் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்று அவரது குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், தினாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகனான ஜக்ஜோத் சிங்(30) வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்.

இந்த நிலையில், 2017-ம் ஆண்ட ஜக்ஜோத் சிங்கை அமெரிக்காவிற்கு வேலைக்கு அவரது பெற்றோர் அனுப்பி வைத்தார். அமெரிக்காவில்உள்ள நியூயார்க்கிலிருந்து கலிபோர்னியாவிற்கு செல்லும் டிரக்கின் ஓட்டுநராக ஜக்ஜோத் சிங் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், ஆக.28-ம்தேதி எல்ஏ நகரில் நடந்த சாலைவிபத்தில் ஜக்ஜோத் சிங் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அமெரிக்காவில் உளள அவரது உறவினர்களுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசும், பஞ்சாப் மாநில அரசும் உதவிட வேண்டும் என்று ஜக்ஜோத் சிங் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் சென்று உயிரிழப்பதில் பஞ்சாப் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அம்மாநில மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பஞ்சாப் இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அரசு வழங்கினால், எந்த இளைஞரும் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in