
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் வழங்கப்படும் என்று பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
7வது ஊதியக்குழுவின்படி பஞ்சாப் அரசின் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கு மொத்தம் ரூ.280 கோடி ஊதிய உயர்வு கிடைக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நிதி மற்றும் உயர்த்தப்பட்ட சம்பளம் மாநில கருவூலத்தில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. 7வது ஊதியக்குழு மற்றும் விடுமுறை சலுகைகள் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மாநில அரசின் மிகப்பெரிய நடவடிக்கை இது என்று பஞ்சாப் மாநில உயர்கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் இந்த முடிவைப் பாராட்டினார்.