மீண்டும் பழைய பென்சன் திட்டம்: பஞ்சாப் அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: பஞ்சாப் அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான கொள்கை முடிவை பஞ்சாப் மாநில அரசு இன்று எடுத்துள்ளது.

தீபாவளிப் பரிசாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக, சண்டிகரில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். பஞ்சாபை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வருகிறோம்”என்றார். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஊழியர்களுக்கு விருப்பம் வழங்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பு, பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கான பழைய பென்சன்திட்டத்தை மீட்டெடுப்பது குறித்து தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பகவந்த் மான் கூறியிருந்தார்.

2004-ல் நிறுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான திரு சீமா, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்போம் என்று உறுதியளித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in