குறைந்தபட்ச ஆதரவு விலை: மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்குறைந்தபட்ச ஆதரவு விலை: மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சமமான நீர் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இன்று ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து விவசாய சங்கங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளுக்கு முறையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு உறுதியளித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை (எம்எஸ்பி) விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனு மூலம் பிரதமர் மோடியை வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநிலம் தர்ன்தரன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜர்னைல் சிங், "எங்கள் கோரிக்கைகள் ஒன்றே. பஞ்சாப் விவசாயிகளுக்கு முறையாக தண்ணீரை விநியோகிக்க வேண்டும். தண்ணீரெல்லாம் ராஜஸ்தானுக்கும், டெல்லிக்கும் போகிறது. பஞ்சாபி விவசாயிகள் என்ன செய்வார்கள்? கோதுமை மற்றும் பருப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. எங்கள் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in