`பாடகருக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்' - பஞ்சாப் காங்கிரஸ் எம்பிக்கு வாட்ஸ்அப்பில் வந்த மிரட்டல்

`பாடகருக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்' - பஞ்சாப் காங்கிரஸ் எம்பிக்கு வாட்ஸ்அப்பில் வந்த மிரட்டல்

``சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியைப் போலவே நீங்களும் சந்திக்க நேரிடும்'' என பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி ரவ்நீத் சிங் பிட்டுவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் வந்துள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி ரவ்நீத் சிங் பிட்டுக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பில், "உங்கள் கட்சியை சேர்ந்த மறைந்த பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட அதே கதி உங்களுக்கும் ஏற்படும்" என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. லூதியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிட்டுவின் தனிப்பட்ட பாதுகாப்பு படையினர் இந்த மிரட்டல் அழைப்பு வந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மே 29 அன்று பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் படுகொலை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் ஆகியோருக்கும் "மூஸ்வாலாவை போல" கொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் கடிதம் வந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in