கைதான 48 நாளில் குற்றவாளிக்கு தண்டனை: அவதூறு வழக்கில் சென்னை போலீஸ் அதிரடி

கைதான 48 நாளில் குற்றவாளிக்கு தண்டனை: அவதூறு வழக்கில் சென்னை போலீஸ் அதிரடி

முதல்வர் ஸ்டாலினை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு 48 நாட்களில் தண்டனை வழங்கி உள்ளனர் குற்றப் பிரிவு காவல்துறையினர்.

சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்களை தமிழக குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், தலைவர்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினரே மாறி மாறி அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் அரவிந்த் நாகராஜ் என்பவர் சமூக ஊடகங்களில் முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தமிழக காவல்துறை பற்றியும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 15 நாட்களில் அவருக்கு எதிரான சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டிய காவல்துறையினர் சென்னை எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அரவிந்த் நாகராஜை குற்றவாளி என அறிவித்ததோடு, அவருக்கு 17 நாட்கள் சிறை தண்டனையும் 6,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in