சந்திர கிரகணம் எதிரொலி: கோயில்களில் பூஜை நேரம் மாற்றம்

சந்திர கிரகணம் எதிரொலி: கோயில்களில் பூஜை நேரம் மாற்றம்

சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இதை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் உள்ள முக்கியக் கோயில்கள் அந்த நேரத்தில் நடை பூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜை நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம். பொதுவாகவே கிரகண காலங்களில் கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கமான ஒன்று. இன்று மாலை 5.47 முதல் 6.25வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் பிற்பகல் 2.30 மணிக்கே மலைக்கோயில் மற்றும் உபகோயில்கள் அனைத்தின் நடைகளும் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரகிரகணம் முடிந்த பின்பு, இரவு 7 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சம்ரோஷன பூஜை நடக்கிறது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1.30க்கு நடை மூடப்படும். இரவு 7 மணிக்கு சந்திரகிரகணம் முடிந்த பின்பே மீண்டும் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடக்கும்.

திருப்பதி

இதேபோல் திருப்பதி வெங்கடாச்சலபதி கோயிலிலும் சந்திரகிரகண நேரத்தில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என தமிழகத்தில் அனைத்து முக்கிய ஆலயங்களிலுமே இன்று சந்திர கிரகணம் முடிந்த பின்புதான் நடை திறக்கப்படும் என அந்த, அந்த கோயில் செயல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in