உலகக்கோப்பை கால்பந்து பற்றி துல்லிய கணிப்பு: புதுக்கோட்டை விமானிக்கு குவியும் பாராட்டு!

உலகக்கோப்பை கால்பந்து பற்றி துல்லிய கணிப்பு: 
புதுக்கோட்டை விமானிக்கு குவியும் பாராட்டு!

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் கோல்கள் அடிக்கும் நேரத்தை முன்கூட்டியே துல்லியமாக கணித்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவிமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சர்வதேச அளவில் கோடான கோடி விளையாட்டு ரசிகர்களை கொண்டது கால்பந்து ஆட்டம். உலகமே கண்டு ரசித்த கடந்த ஒரு மாதமாக நடந்த

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்றிரவு நிறைவடைந்தது. இதில் கடந்த உலகக்கோப்பை சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்குப் பின் 3வது முறையாக சாம்பியனானது.

நேற்றிரவு இறுதி ஆட்டத்தில் 23 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி பெனால்ட்டி மூலம் முதல் கோல் அடித்தார். 36 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா ஒரு கோல் அடித்தார். இதை தொடர்ந்து 54 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் ஏதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் ரசிகர்கள் இடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியது. இந்நிலையில் 80 வது நிமிடத்தில்

பிரான்ஸ் வீரர் எம்பாபோ பெனால்ட்டி மூலம் ஒரு கோலும், 81 வது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்ததால் 2 அணிகளும் சமனடைந்தன. பின்னர் 108 வது நிமிடத்தில் மெஸ்ஸி, 118 வது நிமிடத்தில் எம்பாபோ தலா ஒரு கோல் அடித்ததால் 3:3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் மீண்டும் சமனடைந்தன.

ஆட்டம் இவ்வாறாக போய் கொண்டிருந்த போது,

காலக்கணித ஆய்வாளரும், விமானியுமான புதுக்கோட்டை கணேஷ்குமார் தனது துல்லியமான கணிப்பை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இவரது கணிப்பே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதுக்கோட்டை மச்சுவாடி ராம் நகர் 2-ம் வீதியைச் சேர்ந்த கணேஷ் குமார், கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக காலக் கணிதம் பயின்று வருகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் முனைவர் பட்டம் பெறுவோருக்கு இவர் வழிகாட்டியாக உள்ளார். அரசியல் மாற்றம், விளையாட்டு, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள், பெரும்விபத்து, தீ விபத்து தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கணித்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். உலகக்கோப்பை

கால்பந்து இறுதி ஆட்டம் தொடங்க 40 நிமிடங்களுக்கு முன், இவர் தனது முகநூல்

பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.

அதில், இந்திய நேரப்படி 20:48-20:55 க்குள் முதல் கோல், 21:06 -21:08 இரண்டாவது கோல் விழும் என கணித்து இருந்தார். இதன்படி 20:53 மணிக்கு முதல் கோல் துல்லியமாக 21:06 மணிக்கு 2 வது கோல் விழுந்தது.

உலகமே உற்று நோக்கிய இறுதி ஆட்டத்தின் முக்கிய தருணங்களை, முன்கூட்டியே துல்லிய கணிப்பால் வியப்படைந்த பலர், கணேஷ் குமாரை சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் கணேஷ் குமாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in