`பாரம்பரிய கதராடை அணிந்து அலுவலகம் வரவேண்டும்'- அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்`பாரம்பரிய கதராடை அணிந்து அலுவலகம் வரவேண்டும்'- அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

``மாதத்தின் முதல் நாளன்று அரசு ஊழியர்கள் பாரம்பரிய கதராடை உடை அணிந்து  அலுவலகத்திற்கு வரவேண்டும்'' என்று புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

புதுவை மாநிலத்தின் அனைத்து துறைத்தலைவா்களுக்கும்    சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'புதுவையில் மாதத்தில் முதல்நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியா்களும் பாரம்பரியமான கதராடைகளை அணிந்து, கைத்தறி தினமாக கடைப்பிடிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல புதுவை மாநிலத்தில்  மக்கள் குறைதீா்க்கும் நாள் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசுத் துறைகளுக்கு அவர் மற்றொரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாதந்தோறும் 15-ம் தேதி மக்கள் குறைகளைத் தீா்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் மனுக்களைப் பெறவேண்டும். இந்த மனுக்களுக்கு தனியாக கோப்புகளை  தயாா் செய்துவைத்து, தீா்வு காணவேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு கண்டு, அதை அடுத்துவரும் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in