`குறைந்த விலையில் சாராயம் வேண்டும்'- கொடுக்க மறுத்த வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்

`குறைந்த விலையில் சாராயம் வேண்டும்'- கொடுக்க மறுத்த வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து  சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்து குறைந்த விலையில் விற்பனை செய்த சாராய வியாபாரியையும் அவரிடம் தகராறு செய்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள மருதம்பள்ளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான நொண்டி கந்தன் (60) என்பவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து  சட்டவிரோதமாக பாண்டிய ஐஸ் பாக்கெட்  என்னும் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவரை போலீஸார் கைது செய்தாலும், அவரின்  கால்களில்  உள்ள காயங்களின்  காரணமாக கிளை சிறைச்சாலை முதல் மத்திய சிறைச்சாலைகள் வரை அவரை  அழைப்பு காவலுக்கு எடுத்துக் கொள்வதில்லை. 

இதனால் ஒவ்வொரு முறையும் போலீஸார், அபராதம்  செலுத்தக்கூடிய பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். இந்நிலையில் நொண்டி கந்தன் சாராயம் விற்குமிடத்தில் சாராய விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் என்பவரிடம் நன்கு அறிமுகமான  சிலர் குறைவான பணத்தைக் கொடுத்து சாராயம் வாங்கியுள்ளனர்.  

குறைந்த விலையில் சாராயம் வேண்டும் என்று  கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன்,  மகாலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in