விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு வீடு: வழங்கினார் புதுவை முதல்வர்

விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு வீடு: வழங்கினார் புதுவை முதல்வர்

கூடப் படித்த தோழியின் தாயால் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட காரைக்கால் சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின் பேரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவன் பால மணிகண்டன் அவன் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தாயாரால் விஷம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டு உயிரிழந்தான். இது காரைக்கால் மற்றும் புதுவையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவன் சிகிச்சை பெற்ற காரைக்கால் அரசு மருத்துவமனையில் அவனுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து புதுவை அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் வாடகை வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது முதல்வர் ரங்கசாமிக்கு தெரியவந்தது. அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க புதுவை முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதனையடுத்து புதுவை மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சண்முகம் இன்று மாலை, காரைக்காலில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒன்றினை மாணவன் பாலமணிகண்டனின் தந்தையிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வின்போது துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவனின் உறவினர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in