உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியீடு; சரிந்தது அதானியின் சொத்து மதிப்பு!

அதானி
அதானிஉலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியீடு; சரிந்தது அதானியின் சொத்து மதிப்பு!

உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.

உலக பணக்காரர் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இன்டெக்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னாட் அர்னால்ட் 15.4 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 12 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

நான்காம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின்ஜெஃப் பெஸாேஸ் 10 லட்சம் கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அதே நேரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 9.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதையடுத்து அவர் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் 9.81 கோடி லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in