
தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிடப்படுவதால் HappyBirthdayPTR என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு நேரிலும் அலைபேசி வழியாகவும் ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் இணையத்தில் அரசியல் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் திமுக தொண்டர்கள் மட்டுமின்றி பிற கட்சியினர் பலரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வாழ்த்துகள் சொல்லி ட்விட் செய்து வருகின்றனர்.
இதனால் இன்று காலை முதலே தமிழ்நாடு அளவில் HappyBirthdayPTR என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.