முதல் பெண் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகிறார் பி.டி.உஷா!

முதல் பெண் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகிறார் பி.டி.உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார்.

இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் பி.டி.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பல பட்டப் பெயர்களுக்கு இவர் சொந்தக்காரர். விளையாட்டுத்துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் இவரே. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பயோலி கிராமத்தில் 1964-ம் ஆண்டு பிறந்தார் உஷா. சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். 1979-ம் ஆண்டு தேசிய தடகளப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் பட்டம் வென்றார். பின்னர் தேசிய, ஆசிய, சர்வதேச அளவிலான பல போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல பதக்கங்களைக் குவித்தார்.

இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கேரளாவை சேர்ந்த பிடி உஷா அறிவித்தார். டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்த பதவிக்கு யாரும் இதுவரை மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி.உஷா பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in