எனக்கு ஏன் சீட் தரலை... 500 கார்களுடன் மத்திய அமைச்சர்களை முற்றுகையிட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ!

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

முன்னாள் எம்எல்ஏவுக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதை அடுத்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாஜக தலைமையகம் முற்றுகையிடப்பட்டது. மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளில் தேர்தலில் நிற்பதற்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் பாஜக தலைவர்களின் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

சோன்காட்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ ராஜேந்திர வர்மாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் போபாலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இன்று கட்சி தலைமை அலுவலகத்தில், சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 39 பாஜக வேட்பாளர்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா மற்றும் மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த பயிற்சியின் போது இந்த போராட்டம் நடந்ததால் பரபரப்பு உருவானது.

பாஜக
பாஜக

ராஜேந்திர வர்மா போலவே, மகாராஜ்பூர், சட்டர்பூர், பண்டா, சுமாவலி, சபல்கர், லாஞ்சி, பந்தூர்னா மற்றும் சவுன்சர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தொகுதிகளில் டிக்கெட் மறுக்கப்பட்ட பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தேவாஸ் மாவட்டத்தின் சோன்காட்ச்( தனி) தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள், முன்னாள் எம்எல்ஏவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சுமார் 500 வாகனங்களில் போபால் தலைமையகத்திற்குச் சென்றனர். 2013ம் ஆண்டு இந்த தொகுதியில் வென்ற வர்மா, 2018-ல் 9,700 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்திருந்தார்.

சிவராஜ் சிங் சவுகான்
சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் மற்றும் சத்தீஸ்கரில் 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக கடந்த வாரம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தால் இம்மாநிலங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in