பாலியல் தொழிலில் போட்டி... அரை நிர்வாணமாக்கி புரோக்கர் சித்ரவதை: கடத்தி கொல்ல முயன்ற மூவர் கைது!

பாலியல் தொழிலில் போட்டி... அரை நிர்வாணமாக்கி புரோக்கர் சித்ரவதை: கடத்தி கொல்ல முயன்ற மூவர் கைது!

பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக வாலிபரைக் கடத்தி கொலை செய்யத் திட்டமிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு மூல காரணமான நண்பர்கள் தலைமறைவாகி இருப்பதால் அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருக்குச் சென்னையில் விபச்சாரம் தொழில் செய்யும் ஹணன் அலி என்பவருடன் நட்பு இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அவரும் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஹணன் அலிக்குச் சொந்தமான துரைப்பாக்கம் மற்றும் திருவான்மியூரில் OYO என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தனியார் விடுதிகளில் கோபாலகிருஷ்ணன் தங்கி, விபச்சாரத் தொழிலைப் பலப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கோபாலகிருஷணனிற்கும், ஹணன் அலிக்கும் தொழிலில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட இன்னொரு விபச்சாரத் புரோக்கர் கோபாலகிருஷ்ணனை தனக்கு ஆதரவாகத் தொழில் செய்யும் படி கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ரகசியமாகத் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள தனது ஸ்பா-வில் தங்கி விபச்சாரத் தொழிலை வளர்க்கச் சொல்லியுள்ளார். அதற்கு அவர் கோபாலகிருஷணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு புரோக்கர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களுக்கு எதிராக கோபாலகிருஷணன் தொழில் செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

பழைய நண்பர் ஹணன் அலி மற்றும் புதிய புரோக்கர் ஆகிய இருவருக்கும் இவர் மீது பகை உண்டானது. இந்த நிலையில், துரைப்பாக்கத்தில் உள்ள OYO விடுதியில் கோபாலகிருஷ்ணன் வேலை செய்து கொண்டிருந்த போது, புதிதாக அறிமுகமான நண்பர் அடியாட்களுடன் வந்து கோபாலகிருஷ்ணனை மிரட்டி காரில் கடத்தி சென்றுள்ளார். பின்பு ஊரப்பாக்கத்தில் உள்ள கோதண்டராமன் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரை அரை நிர்வாணமாக்கி கை, கால்களைக் கட்டி சித்ரவதை செய்து வந்துள்ளனர். கடத்தி வந்தவர்கள் வெளியில் சென்றபோது கோபாலகிருஷ்ணன் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி ஆய்வாளர் கீதா அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது தொழில் போட்டி காரணமாக அவரை கடத்தி கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோபாலகிருஷ்ணனை கடத்தி வந்த ராபின்(26), நிவின்(27), அகில்(23) ஆகிய மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடத்தலுக்குக் காரணமான இருவர் தலைமறைவாகி இருப்பதால் அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in