`1.90 கோடி சொத்துவரியை செலுத்தாவிட்டால் தாஜ்மகாலை எடுத்துக்கொள்வோம்'- உபி அரசு நோட்டீஸ்

`1.90 கோடி சொத்துவரியை செலுத்தாவிட்டால் தாஜ்மகாலை எடுத்துக்கொள்வோம்'- உபி அரசு நோட்டீஸ்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு சொத்து வரியை செலுத்த உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பேசும் பொருளாகி இருக்கிறது.

காதலர்களின் நினைவு சின்னமாக கருதப்படுவதோ, உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது தாஜ்மகால். உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் அமைந்துள்ளது தாஜ்மகால். புராதன கலை கொண்ட தாஜ்மகாலை மத்திய தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் தாஜ்மகால் நிர்வாகத்திற்கு முதன் முறையாக ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில், தாஜ்மகாலுக்கான சொத்து வரி 1.90 கோடியையும், தண்ணீர் வரி 1.50 லட்சத்தையும் 15 நாட்களில் செலுத்த வேண்டும் என்றும் வரி செலுத்தாத பட்சத்தில் தங்களது கட்டுப்பாட்டில் தாஜ்மகால் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பட்டேல் கூறுகையில், வரலாற்றுச் சின்னங்களுக்கு சொத்து வரி பொருந்தாது என்றும் புல்லை பசுமையாக வைப்பதற்காக தண்ணீரை பயன்படுத்துவதாகவும் வணிக ரீதியாக பயன்படுத்தவில்லை என்பதால் அதற்கும் வரி விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவது பேசும் பொருளாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in