சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் பேரணி நடத்த திட்டம்...லடாக்கின் லே மாவட்டம் முழுவதும் 144

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்
சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து வரும் 7-ம் தேதி இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், லடாக்கின் லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லடாக்கின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், சூரியமின்சக்தி திட்டங்களுக்கான நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பஷ்மினா அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய பகுதியை உரிமை கோரி வரும் சீனா
இந்திய பகுதியை உரிமை கோரி வரும் சீனா

வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பேரணி மூலம் லடாக் வாசிகள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தியா முழுவதிலும் தெரியப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்தும் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், லடாக்கின் லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பஷமினா அணிவகுப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in