15 நாட்களுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: தமிழக அரசு திடீர் நடவடிக்கை

15 நாட்களுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: தமிழக அரசு திடீர் நடவடிக்கை

திருச்சி மாநகரில்  இன்று முதல் 15 நாட்களுக்கு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை குறிவைத்து  நாடு முழுவதும் நடத்திய சோதனைக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  பல இடங்களில் உண்ணாவிரதம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றன.  இதனால் கோவையில் அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டு கொடி அணிவகுப்பு  நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருச்சியில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில்  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகரில் பொது அமைதியை காக்கும் வகையில் இன்று (24-ம்) முதல் அடுத்தமாதம்  9-ம்  தேதி வரையிலும்  15 நாட்களுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in