காதல் தோல்வியால் பேராசிரியர் மகன் வெறிச்செயல்: சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

பேராசிரியர் மகன் சாகித்யன்
பேராசிரியர் மகன் சாகித்யன்காதல் தோல்வியால் பேராசிரியர் மகன் வெறிச்செயல்: சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

காதல் தோல்வியால் மதுபோதையில் இருந்த பேராசிரியரின் மகன் ஒருவர் சென்னையில் நள்ளிரவில் 7க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி பாரதீஸ்வரர் நகர் 2-வது தெரு மற்றும் தயாளுநகரில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த 7க்கும் மேற்பட்ட கார்களை நேற்று நள்ளிரவு மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவர், கல்லால் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார்களை அடித்து உடைக்கும் சத்தத்தை கேட்டு வெளியே ஓடிவந்த அப்பகுதி மக்கள் தப்பி ஓட முயன்ற வாலிபரை துரத்திச் சென்று பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பல சுவராஸ்ய தகவல் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியரின் மகனான சாகித்யன்(23) கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி புத்தகக் கண்காட்சியில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் சாகித்யன் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் காதல் தோல்வி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று சாகித்யன் சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு, போதையில் அங்கிருந்த நபர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்ட போது அந்த நபர்கள் சாகித்யனை தாக்கிவிட்டு கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் மகன் சாகித்யன்
பேராசிரியர் மகன் சாகித்யன்

காதல் தோல்வி மற்றும் செல்போன் பறிபோனதால் ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சாகித்யன் மதுபோதையில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த 7க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கியுள்ளார். வடபழனி போலீஸார், சாகித்யன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in