தேர்தல் பத்திரம் ரத்து; நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு... பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Updated on
2 min read

தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

இந்திய நீதித்துறை சுயநல கும்பலின் அழுத்தம், நெருக்கடிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுற்றுதலும் ஆபத்தையும் ஏற்படுத்துபவையாகும் என கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே உள்பட 600 வழக்கறிஞர்கள் சமீபத்தில் கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "மற்றவர்களை மிரட்டுவதும் கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாச்சாரம். 5 தசாப்தங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு அர்ப்பணிப்புள்ள நீதித்துறைக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநல நலன்களுக்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள். ஆனால் தேசத்துக்கான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் விலகிவிடுகிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

140 கோடி இந்தியர்கள் அவர்களை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை.” என குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மோசடிகள் அம்பலப்படுத்தப்படுகின்றன. இதைப் பார்த்த பிறகு கடிதங்கள் எழுதுவதன் மூலம் நீதித்துறை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பின்னர் பிரதமரே களத்தில் இறங்கி நீதித்துறை குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசியல் தலையீட்டால் பாதிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது, மாநிலங்களவைக்கு ஒரு நீதிபதியை அனுப்புவது, தேர்தலில் ஒரு (முன்னாள்) நீதிபதியை வேட்பாளராக நிறுத்துவது, நீதிபதிகள் நியமனத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பது மற்றும் முடிவுகள் தங்களுக்கு எதிராக இருக்கும்போது நீதித்துறை குறித்து கருத்து தெரிவிப்பது.. சுதந்திரமான, வலுவான நீதித்துறையை மோடி அரசு அங்கீகரிக்கவில்லையா?” இவ்வாறு பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in