தீபாவளி பண்டிகைக்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ஆம்னி பேருந்துகளில் அடாவடி கட்டணக்கொள்ளை

தீபாவளி பண்டிகைக்காக  டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ஆம்னி பேருந்துகளில் அடாவடி கட்டணக்கொள்ளை

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவை தனியார் ஆம்னி பேருந்துகள் துவக்கியுள்ள நிலையில், தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ள இரண்டு, மூன்று மடங்கு கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அடுத்த மாதம் 24.ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு  இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரண்டு மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே போல், திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரத்து 950 ரூபாயும், மதுரைக்கு 3 ஆயிரத்து100 வரையும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வழக்கமான நாட்களில் ரூபாய் 1000 த்துக்கும் குறைவாகவே வசூலிக்கப்பட்டு வந்தது. 

இந்த கட்டண உயர்வால் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டுமென்றால் 10,000 ரூபாய் பேருந்துக்கே செலவழிக்க வேண்டியிருக்கிறது.  அதேபோல மதுரை,  திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது  16 ஆயிரம் ரூபாய் வரை பேருந்துக்கு செலவழிக்க வேண்டியிருக்கும்.  இதனால் என்ன செய்வது,  எப்படி சொந்த ஊருக்கு செல்வது என்று தெரியாமல் நடுத்தர மக்கள் தவித்துப் போய் உள்ளனர்.

எனவே, ஆம்னி பேருந்துகளின்  கட்டணத்தை மாநில அரசே வரையறை செய்து  அது கண்டிப்பாக  கடைபிடிக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்,  அத்துடன் கூடுதலாக அரசு விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கும்,  கோவை பகுதிக்கும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in