7 பேரை கொலை செய்த கைதி பாளையங்கோட்டை சிறையில் திடீர் மரணம்

7 பேரை கொலை செய்த கைதி பாளையங்கோட்டை சிறையில் திடீர் மரணம்
m_lakshmiarun

ஏழுபேரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி உடல்நலமின்மையால் திடீர் மரணம் அடைந்தார்.

தென்காசி மாவட்டம், கற்குடியைச் சேர்ந்தவர் உதயகுமார்(33). லாரி ஓட்டுநரான இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோ ஒன்றின் மீது லாரியை மோதினார். இதில் இரு பெண்கள் உள்பட ஆறு பேர் உயிர் இழந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மீன்பாசி குத்தகை ஏலத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆறுபேரைக் கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட உதயகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே ஆறுபேரைக் கொலை செய்த உதயகுமார், இவ்வழக்கில் தனக்கு எதிராக சாட்சி அளித்த ஹரிகரன் என்பவரை ஜாமீனில் வந்தபோது கொலை செய்தார். அவ்வழக்கிற்காகவும் கைது செய்யப்பட்டவர், ஜாமீனில் சென்று தலைமறைவானார். போலீஸார் பிடிவாரன்ட் போட்டு அவரைக் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதயகுமாருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் உதயகுமாரை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பாளை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in