100 வயது தாயார் மறைவால் பிரதமர் மோடி உருக்கம், தலைவர்கள் இரங்கல்

100 வயது தாயார் மறைவால் பிரதமர் மோடி உருக்கம், தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். தாயாரின் மறைவையொட்டி அவரது மகனும் பிரதமருமான மோடி உருக்கமான பதிவிட்டுள்ளார். தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார். தாயார் மறைவையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி.

"ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும்; தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். 100-வது பிறந்தநாளில் எனது தாயார் சொன்ன விஷயம் என்போதும் நினைவில் இருக்கும்'' என்று கூறியுள்ளார்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in