பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார்!: சொல்கிறார் போகர் ஆதீனம்

சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்
சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார்!: சொல்கிறார் போகர் ஆதீனம்

பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதிநெறி தவறாத ஆட்சி நடக்கும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும் என பழநி போகர் ஆதீனம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தெரிவித்தார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் உள்ளார். இவரும் கடந்த 28-ம் தேதி புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடிக்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்குப் பின்பு பழநிக்கு திரும்பி வந்த போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு ஆவினன்குடி ஆலயத்தின் முன்பு பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் திரளான மக்கள் முன்பு பேசுகையில், “பாரதப் பிரதமருக்கு செங்கோல் வழங்கியபோது அவர் சாஸ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார். இந்நிகழ்வு வாழ்வில் மறக்கமுடியாதது. நாடாளுமன்றம் கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ளது. எங்களைப் பிரதமர் இல்லத்திற்கு அழைத்து மரியாதை செய்தார்.

பழநி மக்களின் சார்பில் இதில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த பெருமை பழநி முருகனையே சேரும். மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத இடத்திலேயே செங்கோல் இருக்கும். சித்தர் பீடங்களைக் காக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in