ஜூலை 28-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஜூலை 28-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளதால் மாமல்லபுரம் இப்போதே களைகட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in