திருச்சபைக்கு வந்த கல்லூரி மாணவி கர்ப்பம்: பாதிரியார் மகன் தலைமறைவு

திருச்சபைக்கு வந்த கல்லூரி மாணவி கர்ப்பம்: பாதிரியார் மகன் தலைமறைவு

திருநெல்வேலியில் மாணவியை கர்ப்பமாக்கிவிட்டுத் தலைமறைவான பாதிரியாரின் மகனைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கலந்தப்பனை பகுதியைச் சேர்ந்தவர் அனிஸ் புவுல்(25). இவரது தந்தை பாதிரியாராக உள்ளார். இவர் கலந்தபனை பகுதியில் சபை ஒன்றையும் நடத்திவருகிறார். இந்த சபைக்கு 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் அடிக்கடி வருவார். அப்போது அந்த மாணவியும் அனிஸ் பவுலும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதையும் தாண்டி ஒருகட்டத்தில் எல்லை மீறினர். ஒருகட்டத்தில் அந்த மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்மாறு அனிஸ் பவுலிடம் கூறினார். ஆனால் அவர் அதன் பின்பு அந்த மாணவியிடம் பேசுவதையும், பார்ப்பதையும் நிறுத்திவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அனிஸ் பவுல் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் எல்லை மீறியதாகவும் மாணவி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அனீஸ் பவுல், அவரது தந்தை, அவர்களது உறவினர் ஒருவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in