தங்கையை அறையில் தள்ளிப் பூட்டினார்… 17 வயது அக்காவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்: போலீஸாரைப் பதற வைத்த மதபோதகர்!

மதபோதகர் ஸ்டீபன் ராஜ்.
மதபோதகர் ஸ்டீபன் ராஜ்.

கோவையில் 17 சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். மதபோதகரான இவர் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வெள்ளிக்கிழமை தோறும் ஜெபக்கூட்டம் நடத்தி வந்துள்ளார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெபக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

இவரது வீட்டின் அருகே பாட்டியுடன் இரு சிறுமிகள் வசித்து வந்தனர். நேற்று அந்த பாட்டி கடைக்குச் சென்றிருந்த போது அவரது வீட்டிற்குள் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கிருந்த 12 வயது சிறுமியை ஒரு அறையில் பூட்டி தாழிட்டுள்ளார். அவரது அக்காவான 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஸ்டீபன்ராஜ் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்த சிறுமி கூச்சமிட்டதால், ஸ்டீபன்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் 17 வயது சிறுமி கூறினார். இதையடுத்து அவரது பாட்டி, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மை என்பது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in