மதுக்கடை
மதுக்கடை

நவம்பர் 1ம் தேதி முதல் உயர்கிறது மதுபானங்களின் விலை... அரசு அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் வாட் வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் பார்கள், ஹோட்டல்கள், பப்களில் மதுபானங்களின் விலை அதிகரிக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே உள்நாட்டு மதுபான வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.500 வரை உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் பல மாநிலங்களில் கலால் வரி உயரும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசும் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள உணவகங்கள், பார்கள், பப்களில், ஓய்வறைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மாநில அரசு மதிப்புக்கூட்டு வரி எனப்படும் வாட் வரியினை 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் மதுபானங்கள் விலை உயர்வு ஏற்படும் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

மதுக்கடை
மதுக்கடை

இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானங்கள் மீதான வாட் வரி உயர்வு தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்கனவே அதிக வாட் வரி செலுத்தி வருவதால் மதுபான சேவைகளுக்கு உயர்வு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான சேவைகளுக்கு விதிக்கப்படும் வாட் வரி 20 சதவீதமாக உள்ளது.

இந்த வாட் வரி அதிகரிப்பினால், 3 நட்சத்திரங்களுக்குக் கீழ் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 5 சதவீதம் முதல் 10-15 சதவீதம் வரை மதிப்புக்கூட்டு வரி அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 300 முதல் ரூ. 600 கோடி வரை வருவாயை அதிகரிக்க உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in