ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை: என்ன காரணம்?

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சையை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக அக்டோபர் 16 அன்று டெல்லி இராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி முர்முவுக்கு இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அவரது வலது கண்ணிலும் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். திரௌபதி முர்மு ஜூலை 25 அன்று இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in