இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்திய அரசின் சார்பில் கலந்துகொண்டு இரங்கல் தெரிவிக்கவுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவிப்பதற்காக செப்டம்பர் 17 ம் தேதி பிரிட்டன் செல்லவுள்ளார், அவர் 19ம் தேதி வரை அங்கு இருப்பார்.

இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் 12ம் தேதி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் இந்தியாவின் சார்பில் இரங்கலைத் தெரிவித்தார். செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இந்தியாவில் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in