ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்ட நாள்... விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு!

குடியரசு தலைவர்  திரெளபதி முர்மு
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி லடாக் யூனியன் பிரதேசம் உருவான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடைபெறும் லடாக் நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் லேவில் உற்சாக வரவேற்பு
தலைநகர் லேவில் உற்சாக வரவேற்பு

இதில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, லடாக் தலைநகர் லேவுக்கு வருகை தந்துள்ளார். நிறுவன நாள் விழாவில் பங்கேற்கும் அவர், சுய உதவி குழுக்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியினர் இடையே கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவத்தளமான சியாச்சின் ராணுவ தளத்திற்கு செல்லும் அவர், அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி, லடாக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் லடாக் பயணம்
குடியரசு தலைவர் லடாக் பயணம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in