நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று உரை; நாளை பட்ஜெட் தாக்கல்

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், நிர்மலா சீதாராமன்
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், நிர்மலா சீதாராமன்hindu கோப்பு படம்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்..

பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். ஜனாதிபதி உரையை தொடர்ந்து 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வரும் 2ம் தேதி விவாதம் தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி 7ம் தேதி பதிலளிக்கிறார். வரும் 11ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை, சீன ஊடுருவல், பெகாசஸ் மென் பொருள் மூலமான செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த கூட்டத் தொடர் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in