ஓடும் ரயிலில் கீழே விழுந்த கர்ப்பிணி... நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ஓடும் ரயிலில் கீழே விழுந்த கர்ப்பிணி... நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது கீழே விழுந்த கர்ப்பிணி பெண்ணை அங்கிருந்த ரயில்வே காவலர் ஓடோடி சென்று காப்பாற்றியுள்ளார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பதறவைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம், தர்பாத் ரயில் நிலையத்துக்கு தனது குழந்தை மற்றும் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் வந்துள்ளார். அப்போது, அவர்கள் செல்ல இருந்த ரயில் மெல்ல நகரத் தொடங்கியது. ஒரு கையில் கைக்குழந்தையை வைத்திருந்த கணவனுடன் கர்ப்பிணி மனைவி ஓடி வந்தார். அப்போது, ரயில் மீது கர்ப்பிணி மனைவி ஏற முயன்றார். இதில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த ரயில்வே காவலர் ஓடோடி சென்று சிறிது தூரம் இழத்து செல்லப்பட்ட அந்த கர்ப்பிணியை காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி காண்போரை பதை பதைக்க வைத்துள்ளது.

தக்க நேரத்தில் கர்ப்பிணியை காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in