காதல் கணவருடன் செல்ல மறுப்பு... ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த கர்ப்பிணி மனைவி: பதறிய பொதுமக்கள்

காதல் கணவருடன் செல்ல மறுப்பு... ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த கர்ப்பிணி மனைவி: பதறிய பொதுமக்கள்

காதல் கணவருடன் செல்ல மறுத்த கர்ப்பிணி மனைவி திடீரென ஓடும் ஆட்டோவில் இருந்து குறித்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள இளவுவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவரும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கவிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கண்ணனும், அவரது தாயாரும் பணம் கேட்டு கவிதாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த கவிதா, தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, கவிதா வீட்டிற்கு கணவன் கண்ணன் அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவை அவரது கணவர் கண்ணன் வலுக்கட்டாயமாக நேற்றிரவு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆட்டோவில் இருந்து கவிதா திடீரென குதித்துள்ளார். இதனைப் பார்த்த அங்கம் பக்கத்தினர் பதறியதோடு, ஆட்டோவை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்திய பின்னர் கணவன்- மனைவி இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in