உலக சாம்பியனை தெறிக்கவிட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா: 3-வது முறையாக வீழ்த்தினார்!

உலக சாம்பியனை தெறிக்கவிட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா: 3-வது முறையாக வீழ்த்தினார்!

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாதித்துள்ளார்.

கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் போட்டி அமெரிக்காவின் மயான்மி நகரில் நேற்றிரவு நடைபெற்றது. 8 முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் முக்கியமானவர்கள் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்.

இந்தப் போட்டியின் 7-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் 4-2 என்ற கணக்கில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. உலக சாம்பியனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.

இருந்தாலும் 7 சுற்றுகள் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in