`நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருகிறது; குழு அமைத்தீர்களா?'- பிரதமரை எச்சரிக்கும் பி.ஆர்.பாண்டியன்

`நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருகிறது; குழு அமைத்தீர்களா?'- பிரதமரை எச்சரிக்கும் பி.ஆர்.பாண்டியன்

``கோயில் நிலத்திற்கு குத்தகை செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்காமல் இழுத்தடிப்பது ஊழல்  முறைகேடு நடப்பதற்கு வழிவகுக்கும்'' என விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பெயர் பலகை திறந்து வைத்து விவசாயிகளிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்து விவசாயிகளுடைய தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. 

இதுவரையிலும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஏமாற்றிவிட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசின் மௌனத்தால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

மத்திய அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு குறித்து வெளியிடுவதற்காக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நாளை 18-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் குத்தகை விவசாயிகளை குத்தகை பாக்கி என்கிற பெயரில் பதிவை ரத்து செய்து நில வெளியற்றம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் இந்நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். 

குறிப்பாக திருக்கொள்ளிக்காடு கொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை பதிவு பெற்று சாகுபடி செய்து வருகிறார்கள்.  கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் செலுத்தி வந்த குத்தகை கட்டணத்திற்க்கு உரிய ரசீதுகள் வழங்கப்படாமல் கோயில் நிர்வாகம் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. 

இது போல தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் இதே ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. எனவே இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். குத்தகை செலுத்திய விவசாயிகளிடம் உரிய விவரங்களை பெற்று குத்தகை செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். ரத்து செய்யப்பட்டுள்ள குத்தகைப் பதிவை மீண்டும் புதுப்பித்து உத்தரவாதப்படுத்த வேண்டும்.  நில வெளியேற்றம் செய்வதற்கென்று திறக்கப்பட்டுள்ள வருவாய் நீதிமன்றங்களை தமிழ்நாடு அரசு மூட முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in