ஆளுநரின் அதிகாரங்கள் என்ன?- சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரசுரம் 

ஆளுநரின் அதிகாரங்கள் என்ன?- சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரசுரம் 

ஒரு மாநில ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பான பிரசுரம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டுவருகிறது. 

தமிழ்நாட்டை, தமிழகம் என அழைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய சர்ச்சை பேச்சு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மற்றொரு குற்றச்சாட்டு ஆளுநர் மீது பூதாகரமாகியுள்ளது. நேற்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கண்டன உரை வாசித்தபோது, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். 

அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஆளுநரின் செயலுக்கு காங்கிரஸ், விசிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரவி வெளியேறுக என திமுகவினரின் ட்விட்டர் பதில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஒரு மாநில ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பான பிரசுரம் பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அதில் மாநில அதிகாரம் அவரிடம் இருந்தாலும், அவர் பெயரளவில் தலைமை நிர்வாகி மட்டுமே. முதல்வரை ஆளுநர் நியமிக்கிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் அவரின் ஒப்புதல் பெற்றே நிறைவேற்றப்படும். மசோதாக்களை குடியரசுத்தலைவர் பரிசீலனைக்கென நிறுத்தி வைக்கலாம். சட்டமன்ற கூட்டத் தொடரில்லாதபோது அவசர சட்டம் இயற்றலாம். நெருக்கடி நிலை அமல்படுத்தும்போது அவர் பரந்த அதிகாரங்கள் பெறுகிறார் உள்பட 18 அதிகாரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in