டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஊழியர்கள், மக்கள் வீதிகளில் தஞ்சம்

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஊழியர்கள், மக்கள் வீதிகளில் தஞ்சம்

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அண்மையில் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், இதன் பாதிப்பு இந்தியாவிலும் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்த நிலையில் இருந்தனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நிலநடுக்கத்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதால் டெல்லி பரபரப்புடன் காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in