ஒரு நாட்டையே பதற வைத்த நிலநடுக்கம்: அலறி அடித்து வீதிக்கு வந்த பொதுமக்கள்!

ஒரு நாட்டையே பதற வைத்த நிலநடுக்கம்: அலறி அடித்து வீதிக்கு வந்த பொதுமக்கள்!

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டையே பதறவைத்துள்ளது.

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓட்டம் பிடித்தனர்.

தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் 30 வினாடிக்கு மேல் நீடித்ததாகவும் எங்கள் வீடுகள் இடிந்து விழும் என்று நினைத்ததாகவும், நாங்கள் எங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கிறோம் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

நிலநடுக்கம் மணிலாவிலும் வலுவாக உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு நகரின் மெட்ரோ ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தலைநகரில் உள்ள செனட் கட்டிடமும் உடனடியாக காலி செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து நில அதிர்வு அமைப்பின் இயக்குநர் ரெனாடோ கூறுகையில், "நிலநடுக்கம் டோலோரஸ் அமைந்துள்ள ஆப்ராவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மணிலாவில் சேதம் காணப்படவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in